சோளிங்கர்: புலிவலம் கிராமத்தில் வீட்டுக்குள் நுழைந்து பள்ளி மாணவி சரமாரியாக வெட்டிக் கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகள் ஜனனி. 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து 11ஆம் வகுப்பு படிப்பதற்காக காத்திருந்தார். இந்த நிலையில் ஜனனி வீட்டில் இருந்தபோது அவரது வீட்டினுள் திடீரென நுழைத மர்ம நபர் ஒருவர் ஜனனி மற்றும் அவரது உறவினரை சரமாரியாக வெட்டினார்.இதில் ஜனனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்