புரசைவாக்கம்: பிராட்வே பிரகாசம் சாலையில் பேருந்து பழுதாகி நின்றது உடனடியாக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பேருந்தை தள்ளி ஓரமாக விட்டனர் இதன் பின் போக்குவரத்து சீரானது.
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஆர்எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவமனை ஆகியவைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லக்கூடிய பகுதியில் இன்று அரசு பேருந்து எண் 56 சி பழுதாகி நின்றது இதனை அடுத்து ஓட்டுநர் பணிமனைக்கு தகவல் தெரிவித்தார் இந்நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று கூடி ஓட்டுநரை அமர செய்து நடத்துனூருடன் பேருந்தை ஓரமாக தள்ளிவிட்டனர் இதனை அடுத்து போக்குவரத்து சீரானது.