இராமநாதபுரம்: இராமநாதபுரம் வனக்கோட்டத்தில் 9200 நாட்டு மரக்கன்றுகள் நடவு - வனத்துறை தகவல்
இராமநாதபுரம் வனக்கோட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் கேம்பா திட்டத்தின் கீழ் இராமேஸ்வரம் காப்புக்காட்டில் 22 ஹெக்டேர் மற்றும் மாரியூர் காப்புக்காட்டில் 8 ஹெக்டேர் என மொத்தம் 30 ஹெக்டேர் அளவில் காட்டுக்கருவேல மரங்கள் அகற்றம் செய்யப்பட்டு அவ்விடத்தில் 30x45 செ.மீ. பை அளவில் வேம்பு, பூவரசு, புங்கன், நாவல் போன்ற 9200 நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.