திருத்தணி: சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் இல்லாததால் இன்றைய தினம் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர், சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட வழக்கறிஞரை திருத்தணி ஆய்வாளர் அடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது