திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பாண்டியராஜபுரம் பகுதிக்கு மதுரை சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மினி பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஓட்டுநர் தங்கவேல் பேருந்து ஓட்டி உள்ளார். இந்நிலையில் சாலையில் வந்த வாகனத்திற்கு வழிவிட்டதாகவும் இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் காயமடைந்தனர்.