பேரூர்: தொண்டாமுத்தூர் பகுதியில் மயக்க ஊசி செலுத்திய நிலையில் மாயமான காட்டு யானையை தேடும் பணி தீவிரம்
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் ரோலக்ஸ் காட்டு யானை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 50 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.