சிங்கம்புனரி: தும்பைபட்டியில் இயங்கிவரும் கல்குவாரியை நிரந்திரமாக மூட வேண்டி 20 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தும்பைபட்டியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லாக்கோட்டை குவாரி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததால், புதிய குவாரிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்தனர். வட்டாட்சியர் நாகநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக குவாரி பணிகளை நிறுத்துவதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.