திருவள்ளூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் அழகரசன் (37). இவர் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபாராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு அளித்தார்,