நெமிலி: நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் . இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்த அவர் வீடு கட்டுமான பணிகளை தரமாகவும் ,விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார் . தொடர்ந்து பரமேஸ்வரிமங்கலம், அருகில்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.