வேடசந்தூர்: பிரபுமில் முன்பாக நூற்பாலை பஸ் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி
சத்திரப்பட்டியை சேர்ந்தவர் மணிராஜ் என்பவரது மகன் சிவா. இந்த நிலையில் தனது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். நாகம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலை முன்பாக வந்த பொழுது நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றி வந்த பஸ் திடீரென குறுக்கே திரும்பியதால் நேராகச் சென்று கொண்டிருந்த சிவாவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சிவாவின் பின்னந்தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.