சேசுராஜ் கொலை வழக்கில் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பொய் வழக்கு போடுவதாக கூறியும் அவரது குடும்பத்தினர் மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசாருடன் தள்ளு முள்ளு. இறந்த சேசுராஜின் தம்பி கென்னடி மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டி மறியல் போராட்டம் நடைபெற்றது... தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.