திண்டுக்கல், பழனிரோடு, ராம் பெட்ரோல் பங்க் எதிரே அரசு மருத்துவரான சுரேஷ் பாபு சத்திய சுபா என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இதில் நான்கு மாடிகள் உள்ள நிலையில் மேல் தளத்தில் சத்திய சுபா மருத்துவமனை என மின்னொழியில் இயங்கும் விளம்பரப் பதாகை வைத்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது 2 தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த 15கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்