வேடசந்தூர்: எரியோட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அதிமுகவினர் ஆறுதல்
வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் லோகேஸ்வரன் ராஜஸ்தான் மாநிம் பரத்பூரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பணியின் போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான எரியோட்டிற்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுக வின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.