திண்டுக்கல் அருகே கடந்த 2012-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் வேடசந்தூர் குன்னாம்பட்டியை சேர்ந்த ராஜ் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து ராஜ் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 13 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் கேரளாவில் பதுங்கி இருந்த ராஜை கைது செய்தனர்