உத்திரமேரூர்: ஒழுகரை ஊராட்சியில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒழுகரை ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா. முருகேசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.