எட்டயபுரம்: சண்முக நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கார் உள்ளிட்டவை கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சண்முக நகர் பகுதியைச் சார்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 25ஆம் தேதி தனது சொந்த ஊரான கோட்ட நத்தம் கிராமத்திற்கு விவசாய வேலைக்காக சென்றுள்ளார். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு திங்கட்கிழமை வீடு வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகை மற்றும் 1.65 லட்சம் ரூபாய் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது இது தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை