வேடசந்தூர் அருகே உள்ள ஜி நடுப்பட்டியில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த எட்டு மாதமாக தங்கி இருந்து வேலை பார்ப்பவர் ஒட்டன்சத்திரம் தாலுகா மார்க்கம்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் வயது 55. இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சுவலிப்பதாக தோட்டத்து உரிமையாளருக்கு போன் செய்துள்ளார். உரிமையாளர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து உள்ளார். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் கார்த்தி பரிசோதனை செய்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.