சின்னாளபட்டி சேரன்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அக்னி சிறகுகள் அமைப்புடன் இணைந்து உலக சாதனைக்காக பள்ளி மைதான வளாகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்பதை வழியுறுத்தியும், பெண்களை போற்ற வேண்டுமென்ற நல்நோக்குடன் உலக சாதனையை நிகழ்த்தியது.1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர்கள் 2ஆயிரம் பேர் பள்ளி மைதானத்தில் இரத்த துளியில் பெண் இருப்பது போல் உருவ அமைப்பில் நின்று உலக சாதனை படைத்தனர்.