திண்டுக்கல் கிழக்கு: அனுமந்தநகரில் மருந்து கடையில் பூட்டை உடைத்து 15000 கொள்ளை
அனுமந்த நகரை சேர்ந்த லால் பகதூர் இவர் அனுமந்த நகர் மெயின் ரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார் வழக்கம் போல் இரவு கடையை பூட்டிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாக தகவல் தெரிவித்தனர். அப்போது கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆய்வாளர் தலைமையில், காவலர்கள் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்