அரக்கோணம்: ஓச்சலம் பகுதியில் நண்பரை கொலை செய்து கை கால்களை கட்டி கிணற்றில் தூக்கி வீசிய நபர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் துரைசாமி நகர் பகுதி சேர்ந்தவர் திலீப் குமார். ஆட்டோ ஓட்டுனாரான இவருக்கும் ஓச்சலம் பகுதி சேர்ந்த ராஜேஷ் என்ற அவரது நண்பருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் ராஜேஷ், திலீப்குமாரை கொன்று ஓச்சலம் பகுதியில் உள்ள கிணற்றில் கை கால்களை கட்டி தூக்கி வீசி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரக்கோணம் போலீசார் ராஜேஷ்சை கைது செய்தனர்..