பொன்னேரி: நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டாயம் வாக்குகளாக மாறும் குமரஞ்சேரி முருகனை தரிசனம் செய்து தாடி பாலாஜி பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குமரஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு குமாரசுவாமி கோவிலில் நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்தார். அப்போது பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் குழு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்களுக்கு நடிகர் தாடி பாலாஜி அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றி கழக தலைவரும் தமது நண்பருமான நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் வெற்றி அடைய வேண்டும் என சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.