தூத்துக்குடியில் மிகப் பிரதான சாலைகளில் ஒன்றாக உள்ளது கடற்கரை சாலை. துறைமுகம், அனல் மின் நிலையம், கடற்கரை பூங்கா போன்ற இடங்களுக்கு இவ்வழியாகத்தான் பொதுமக்கள் ஊழியர்கள் செல்ல வேண்டும். ஆனால் சில மாதங்களாக இரவு நேரங்களில் இந்த கடற்கரைச் சாலை அடிக்கடி மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.