பெரம்பூர்: பெரம்பூரில் வெள்ளையன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு சரத்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரம்பூரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நினைவு தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் சங்க பேரவை அலுவலகத்தில் நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிமான சரத்குமார் வருகை தந்து வெள்ளையன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ஆமையின் நுழைந்த வீடும் பாஜக நுழைந்த மாநிலமும் ஒன்று என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்தார்