பூதலூர்: மனைவி கண் முன்பே விபத்தில் கணவர் இறந்த பெரும் சோகம். செங்கிப்பட்டி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயம்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பூதலூர் பிரிவுச் சாலையில் சீராளூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் உதயகுமார் என்பவர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக தனது பைக்கில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் தன் மனைவி கண் முன்பே உதயகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் உதயகுமாரின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.