வேடசந்தூர்: மூப்பனார் நகரில் இந்து மக்கள் கட்சியினரின் போராட்டத்தால் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
வேடசந்தூர் அருகே தட்டாரப்பட்டி ஊராட்சியில் மூப்பனார் நகர் வழியாக திருமாணிக்கனூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மேலும் மூப்பனார் நகரில் போதுமான குடிநீர் வசதி தெரு விளக்கு வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து பூமி பூஜை போட்டு பணியை தொடங்கினார். இந்து மக்கள் கட்சியினர் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.