வேடசந்தூர்: மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
வேடசந்தூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் விதத்தில் தீபாவளி விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் கௌரவ தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் சந்திரசேகரன், மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.