திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் வல்லூர் அனல் மின் நிலையம் சரக்கு பெட்டக முனையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொண்டக்கரை குருவி மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளதால் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு ஏதுவாக இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடப்பதால் கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.