ஆவடி: போரூர் ராமாபுரம் பகுதியில் தள்ளு வண்டி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த நபர் கைது
சென்னை போரூர் ராமாபுரம், பெரியார் சாலை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (43) என்பவர் பாரதி சாலை சந்திப்பில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி இரவு கடைக்கு வந்த நபர் சாப்பிட்டு பணம் தாராமல் கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணம் பறித்து சென்றார். நாகராஜன் ராமாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி சின்னப்போரூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.