திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள உமா ராஜேந்திரா திரையரங்கில் படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இங்கு குவிந்த ரஜினி ரசிகர்கள் வெடி வெடித்தும், ரஜினியின் படத்துக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் படத்தை காண்பதற்காக திரையரங்கிற்கு Genz (மாணவிகள்) இளைஞர்கள் அதிகளவு குவிந்தனர். மேலும், திரையரங்கில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் திரையில் மீண்டும் தோன்றும் போது ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரம் செய்தனர்