தூத்துக்குடி: அதிமுக 54ம் ஆண்டு தொடக்க விழா பழைய மாநகராட்சி முன்பு MGR சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை
அதிமுகவின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில், அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவருமான என். சின்னத்துரை முன்னிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது