வேடசந்தூர்: ஆத்துமேட்டில் பேக்கரி கடையில் ஆப்பிள் மாதுளை பழங்களை திருடிய நபரை பிடித்த ஊழியர்கள்
வேடசந்தூர் ஆத்துமேடு திண்டுக்கல் பஸ் நிறுத்தம் அருகே பிரபல பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த நபர் ஒருவர் சாப்பிடுவதற்காக வடை வாங்கிக்கொண்டு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்ட பழங்கள் இருக்கும் இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டார். பின்பு அருகிலேயே ஸ்டாண்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் மற்றும் மாதுளம் பழங்களை யாரும் பார்க்காத வண்ணம் எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டார். அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் இதனை கவனித்து கடை ஊழியர்களிடம் தெரிவித்தார்.