கள்ளக்குறிச்சி: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் தெற்கு மாவட்ட திமுக மாபெரும் சாதனை புரிந்துள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பேட்டி
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்தார். இன்று (செப்.14), திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார்.