கொடைக்கானல்: காட்டு மாடு முட்டி பெண் படுகாயம் K.C.பட்டி அருகே பரிதாபம்
கொடைக்கானல் கீழ்மலை, தாண்டிக்குடி, K.C.பட்டி அருகே குப்பம்மாள்பட்டியை சேர்ந்த பிரபு மனைவி சாந்தி இவர் அப்பகுதியில் பாலன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டு மாடு சாந்தியை முட்டி தூக்கி வீசியது இதில் சாந்தி இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்