வாலாஜாபாத்: ஊத்துக்காடு ஊராட்சியில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது இதனை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசியல்வாதிகள் உடன் இருந்தனர்