கொடுமுடி: ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் 220 ஆவது நினைவு தினம் அமைச்சர் அரசு மரியாதை செலுத்தினார்
வெள்ளையனை எதிர்த்து போராடி தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இந்த நினைவிடத்தில் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் அரசு மரியாதை செலுத்தினர்