வேடசந்தூர்: அதிமுக பாஜாக கூட்டணி வலிமையாக உள்ளது நேரூஜி நகரில் அர்ஜூன் சம்பத் பேட்டி
வேடசந்தூருக்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன்சம்பத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொழுது அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து அதிமுக பாஜக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் கமலஹாசனை போன்று விஜையும் திமுகவால் உருவாக்கப்பட்டு அதிமுக பாஜகவிற்கு கிடைக்கும் வாக்குகளை தடுப்பதற்காக வந்துள்ளார்.