நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் இருந்து ஒரு டன் மலர்கள் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாலையாக தொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணிகள்
கேரள மாநிலம் சோட்டானிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்காக ஆண்டுதோறும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து சுகந்தா கரிகால பாண்டியன் என்ற பக்தர் ஆலயத்தை அலங்கரிக்க மலர்களை காணிக்கையாக அனுப்பி வருகின்றார்.