ரொட்டியார்சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வெயிலடிச்சாம்பட்டி பிரிவில் சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி, காவலர் தீபா ஆகியோர்கள் கண்காணித்த போது அங்கு கட்டைப்பையில் கஞ்சா வைத்திருந்த முத்தனம்பட்டி புதூர், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 3.650 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.