சூளகிரி: கோனதிம்மனப்பள்ளியில் மழைக்கு சாய்ந்து நிற்கும் மின்கம்பத்திற்கு முட்டுக்கொடுத்துள்ள கிராம மக்கள்: மின்கம்பங்களை சரிசெய்ய கோரிக்கை
சூளகிரி அடுத்த கோனதிம்மனப்பள்ளி என்னும் கிராமத்தில் 30க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது.. இப்பகுதியில் உள்ள இரண்டு மின்கம்பங்கள் ஆபத்தான முறையில், விழும் நிலையில் உள்ளது. மின்கம்பங்கள் தாழ்வாக வீடுகள் மீது செல்வதால் குடியிருப்பு வாசிகள் மின்வயர்களில் பிளாஸ்டிக் பைப்புகுளை அமைத்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்..