தென்காசி: நகரப் பகுதியில் பட்டப்பகலில் கூலித் தொழிலாளிக்கு மதுப்பாட்டினால் கழுத்தில் குத்து போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதி நடுவில் உள்ள யானைப்பால் பகுதியில் உள்ள கோவில் மலை ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை சில நபர்கள் கடுமையாக தாக்கி மதுபாட்டில் உடைத்து அவரது கழுத்தில் மற்றும் கைகளில் குத்தியதாக கூறப்படுகிறது இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த நபரை போலீசார் மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்