பூவிருந்தவல்லி: திருமழிசையில் தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து 12 லட்சம் ரொக்க பணம் கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் சென்னை பப்ளிக் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது,இந்த பள்ளியில் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலக அறையை ஊழியர் பூட்டி விட்டு சென்றுள்ளார்,இந்நிலையில் இன்று காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு 12 லட்சம் பணம் ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளனர்