பொன்னேரி: மீஞ்சூரில் ராட்சத பைப் மூலம் ஊராட்சியில் மழை நீரை வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் முழுவதும் தேங்கி வெளியேற வழி இன்றி நிற்கிறது. பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் ராட்சத பைப் பதித்து சாலையின் மறுபுறம் அமைந்துள்ள நாலூர் ஊராட்சியில் அடங்கிய பத்மாவதி நகர் குடியிருப்பு பகுதிக்கு மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனை கண்டித்து பத்மாவதி நகர் பொதுமக்கள் இன்று காலை பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.