நத்தம்: கொசவப்பட்டியில் அ.தி.மு.க.வின் 54-வது தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கொசவபட்டியில் அ.தி.மு.க. கட்சியின் 54 வது தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு சிறுபான்மை நலப் பிரிவு இணைச் செயலாளர் தாமஸ் அந்தோணி தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் சேசுராஜ் முன்னிலை வகித்தார். இதில் மகளிர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் கிரேஷி, சிறுபான்மை நலப் பிரிவு ஒன்றிய துணைச் செயலாளர் கென்னடி, ஊராட்சி செயலாளர் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.