திருவள்ளூர்: சிற்றம்பாக்கம் இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
திருவள்ளுர் அடுத்த சிற்றம்பாக்கத்தில் கடந்த 20 ம் தேதி இளைஞர் சேதுபதி (26) மீது முன் விரோதப் பகையால் 4 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிச் சென்றனர்.இந்த வழக்கில் இருளஞ்சேரி முகேஷ் (20), நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அபிமன்யு (25) பாபா என்கின்ற வினோத்குமார் (25) பேரம்பாக்கம் காலனி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (21) ஆகிய நான்கு பேரை கடம்பத்தூர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்,அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்