திருவள்ளூர்: வங்கியில் சுமார் ஒன்றறை கோடி வரை பணத்தை இழந்த பெண்கள் பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தீபா என்ற பெண் வங்கியில் ஒப்பந்த ஊழியராக மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியம் வழங்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார் , இந்நிலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த தீபா வங்கி ஊழியர்கள் உடந்தையுடன் 100 பேர் வங்கி கணக்கில் பணத்தை எடுத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, பணத்தை மீட்டு தரக்கோரி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்து மனு அளித்தனர்