வேடசந்தூர்: தாலுகா முழுவதும் உள்ள 13 பட்டாசு கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
தாலுகா பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் 13 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பட்டாசு கடைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் பிரேம்குமார், வேடசந்தூர் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். பட்டாசு கடைகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா,என ஆய்வு செய்தனர்.