வடமதுரை அருகே உள்ள சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 24). இவர் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் வடமதுரை வேலாயுதம்பாளையம் சாலையில் சிட்டம்பட்டியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேல்(40) என்பவர் வேலாயுதம்பாளையம் நோக்கி ஓட்டிச்சென்ற ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனியாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.