திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த வந்த மேயரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பெரிச்சல் ஜிஎன் கார்டன் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற மேயரின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளாத அப்பகுதி பொதுமக்கள் மேயரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.