தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கசவன் குன்று கிராமத்தில் அமைந்துள்ள பெர்னாட் ஆலயத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கு கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய உதவி பங்கு தந்தை குழந்தைசாமி வருகை தந்து கொடியை மந்திரித்து கொடி மரத்தில் ஏற்றினார். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார் இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.