உடையார்பாளையம்: ஜெயங்கொண்டத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையொட்டி இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். இதனையடுத்து தொழுகை முடிந்த பிறகு ஒருவரை, ஒருவர் கட்டி தழுவி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கினர்.